காதல் வியாபாரமா

கண்டவரையெல்லாம்
காதலித்திட முடியாது!
கண் கலங்காமல் காப்பவனையே
காதலிக்க முடியும்
பார்த்தவரெல்லாம் காதலனாக முடியாது!
எவன் அருகாமை பாதுகாப்பைத் தருமோ
அவனே பெண்ணைக் காதலிக்க முடியும்
பேசுபவர் எல்லாம் காதலனாகி விடமுடியாது!
காதலி கோபத்தில் கனல் கக்கினாலும்
குறை சொல்லாதவனே காதலனாக முடியும்.
பழகியவருடன் எல்லாம் சேர்த்து
பக்கம் பக்கமாய் வதந்தி
பேசுபவரெல்லாம் காதலே செய்யாதீர்!
காதல் என்ற வார்த்தைக் கூறி
கழுத்தை அறுத்து விடாதீர்!
சந்தர்ப்பங்களை சாதகமாக்கி,
சங்கடத்தில் தள்ளிவிட்டு,
புது வாழ்க்கைத் தேடிப் புறப்படுமுன்,
உன்னைக் கருவில் சுமந்தவளும்,
உன் கருவை நாளை சுமப்பவளும்,
உன்னுடனே வளர்ந்தவளும்,
உன்னிடம் வளரப் போகிறவளும்,
விதியின் வசத்தால்
இப்படி உழன்றால்,
சந்தோஷம் கொள்வாயா?
நிம்மதி தான் கொள்வாயா?
எண்ணிப்பார்!
வேதனைகளை தருவதற்கு
காதலை வியாபாரமாக்காதீர்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (24-Jan-15, 5:56 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 157

மேலே