உன் நினைவு

தனிமை கொல்லும் நேரம்
உன் நினைவு
வந்து சொல்லும் நேரம்
உறங்கா விழிகள் ரெண்டும்
உன்னையே நினைத்து இருக்கும்
மனதில் ஏதோ பாரம்
கடலாய் வந்த கனவெல்லாம்
காற்றே உன் காதில் சொல்லும்
உன்னை நேசிக்க
ஆரம்பித்த நிமிடம்
எனக்கு தெரியாது...!!
ஆனால் இனிமேல்
வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்...
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்
உன்னோடு இருக்கும்
பொன்னான நிமிடங்கள்
என்னாளும் தொடர்ந்திட
ஏங்குது நெஞ்சம்
என் இதயத்தை
திருடிய உன் காதலால்
ஏன் இப்படி கொல்லுகிறாய்
என் மனதை

எழுதியவர் : கீர்த்தி (25-Jan-15, 8:42 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : un ninaivu
பார்வை : 91

மேலே