பசியின் விலை என்ன ,- அது ஒரு வேளைச் சாப்பாடு அல்ல

இரவே சில்லறை கொடு
இருக்கு உன்னிடம் நட்சத்திரங்கள்.....

கற்பனை பஸ்ஸில் உள்ள
கண்டக்டரும் சில்லறை கேட்கக் கூடும்.....

ஒரு சில நிலவையும் எனக்குக் கொடு...
ஓடுகின்ற எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் கட்டணம் கொஞ்சம் ஓவர்....

காணும் கற்பனைக்கு கூட இனி கடவுள் சேவை வரி விதிக்கக் கூடும் - என்
கருத்தினைப் புரிந்து கொண்டு - கட்டணம் செலுத்த - இனி

இரவே சில்லறை கொடு
இருக்கு உன்னிடம் நட்சத்திரங்கள்.....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Jan-15, 1:11 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 99

மேலே