மனைவி என்னும் காதலி
மஞ்சள் கயிறதனை
நெஞ்சத்தில்
கொண்டவள்!
கொஞ்சும் மொழி பேசி
மஞ்சத்தில்
வென்றவள்!
செல்லாத காசுகளாய்
சிதறி கிடந்த எனை
சேமித்து வைத்தவள்!
போவோர் புறம்
தள்ளி போகையில் எனை
பொத்தி காத்தவள்!
நான் முந்த
தியாகத்தில் தனை
நிறுத்தி நின்றவள்!
கனவு நான் காண
தன் உறக்கம்
கொன்றவள்!
என் எண்ணம் ஈடேற
தன் எண்ணம் மண்
தள்ளி மனம் தேற்றி கொண்டவள்!
காலம் தடுக்கி
கீழ் கவிழ்கையில்
காத்து நின்றவள்!
நம்பிக்கை உடைந்து
நலம் கெடுகையில்
பலம் சேர்த்தவள்!
தோல்வி வீசிய
தூரம் மறக்க என்
பாரம் சுமந்தவள்!
கவலை இறுக்கிய
கணங்களில் அதை
நொறுக்கி மறைத்தவள்!
வாழ்வில் நான்
விழுந்த போதெல்லாம்
தாங்க தோள் தந்தவள்!
என் கண் உடைந்த
நீர் தரை தொடுமுன்!
கை நீட்டி துடைக்க
நின்ற பெண்!
கல் நிறைந்த பாதையிலும்
கண் மூடி வந்தவள்!
முள் தைத்த நேரத்திலும்
என் முடிவுக்காய் நின்றவள்!
மெழுகாக உருகி!
எண்ணங்கள் கருகி!
மனமெல்லாம் இருகி!
நிற்கின்றாள் மருகி!
மன்னிக்க வேண்டுகிறேன்
மனையாளே!
இனி வருகின்ற நாள் முழுதும்
திருநாளே!