காதல் கொண்டேனடி
உன் மீது கொண்டேனடி உள்ளம்!
உன் பெயர் கேட்டால் என்றுமது துள்ளும்!
அறியாதோர் உலகமிதை எள்ளும்!
உன் காதல் இல்லையெனில் மரணமெனை கொள்ளும்!
உன் ஓரப்பார்வை என்னுயிரை கொல்லும்!
நீ இல்லாத கணங்கள் எனை துயரத்தில் தள்ளும்!
மலருந்தன் வருகையிலே மூவுலகும் உருளும்!
உன் வாய் மொழியில் கடன் கேட்கும் தமிழ் புலவன் பள்ளும்!
உனக்காக உடைப்பானடி இராமன் தன் வில்லும்!
ஆனாலும் என் காதல் உன் மனதை வெல்லும்!
நீ போகும் இடம் தேடி என் இதயம் செல்லும்!
உன் கால் பட்டால் உயிரடையும் வழியோரக்கல்லும்!
அன்பே உன் எச்சினிலே விஷம் கூட வெல்லம்!
கவியினிலே பொய் சொல்ல கொள்ளவில்லை கள்ளம்!
உண்மையினில் என் அன்பே நான் கொஞ்சம் குள்ளம்!
உயிரழிந்தாலும் என் மூச்சு காதல் வந்து சொல்லும்!