மாலையின் மந்திரத்தை
யார் தந்தது
ஏந்தி வந்த இந்த போதை இருவிழிகள்
யார் எழுதியது
உன் முக ஓவியத்தை
சாயந்திரங்களின் ஆயிரம் சந்திரோதயங்களை
சேர்த்தெழுதிய சித்திரத்தை
கலைந்தோடும் கூந்தலில்
காற்றோடு நீந்தி வரும் அந்தியின் ராகத்தை
கவிந்திடும் இரு விழிகளில்
கனவுகளாய்ப் பெருகி வரும் காவிரி ஆற்றினை
பொய்யெல்லாம் கொட்டி
புதுப் புது கவிதைகளாய் புனைந்துவிட்டேன்
இன்னும் முடியவில்லையடி
உன் கவிதைப் புத்தகம் !
பூவிதழின் மௌனத்தில்
புன்னகையின் அர்த்தத்தை மூடிச் செல்வதேனோ
சொல்லிச் செல்வாய்
அந்த மாலையின் மந்திரத்தை !
~~~கல்பனா பாரதி~~~