பொங்கல் கவிதைப் போட்டி - நடுவர் தீர்ப்பு - 05

வணக்கம் தோழர்களே...

பொங்கல் கவிதைப் போட்டியினை நெறியாள்கை செய்த சிறப்பு நடுவர்களின் அனுபவப் பகிர்வுடன் இணைந்துவரும் அறிவுரைகள் உங்களின் கவனத்திற்காக முன்வைக்கப் பட்டு வருகின்றன.

அந்தவகையில்...எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சிறப்பு நடுவராக கடமையாற்றிய செல்வி.புலமி அம்பிகா அவர்களின் செய்தி கீழே இணைக்கப் பட்டிருக்கின்றது !

=====================நடுவர் பணி குறித்து-செல்வி.புலமி அம்பிகா

பொதுவாகப் போட்டியானது வரையறைக்குட்பட்டது.அதனடிப்படையில் பொங்கல் கவிதைப் போட்டியில் குறிப்பிடப்பட்டிருந்த வரையறைகளின்படி முதல் கட்டத் தேர்வுகளை முடித்தளித்தேன்...சுவாரசியமான விடயம் இதில் என்னவெனில் நிறைய படைப்பாளிகள் மற்றும் அவர்களது படைப்புகள் குறித்தும் ஒரு படைப்பாளியாக அவர்களது எண்ணங்கள் மற்றும் சொல்லமைவுகள் , பொருளமைவுகள் போன்றவற்றைக் காண முடிந்தது....கவிதை எனும்போது உணர்வுகளே மூல காரணமாக இருக்கின்றது...அது கோபமாகட்டும் , வலியாகட்டும் , மகிழ்வாகட்டும் எல்லாமும் உணர்வுகளின் அடிப்படையில் அதன் உந்துதலில் அவரவர் கருத்துக்கள் மூலம் கவிதையாக , கற்பனை அல்லது நிஜ நிகழ்வாகக் கிடைக்கின்றது........அவ்வகையில் அதிலிருந்து வாசகர் என்ற நிலையில் பெறக்கூடிய மனோநிலை மற்றும் செய்தி கடத்துதல் நிகழ்கின்றது.....சில கவிதைகள் கதை சொல்லும் ..சில கவிதைகள் நோக்கம் சொல்லும்...சில கவிதைகள் ரசனைக்காக மட்டுமே விளங்கும்....சில விளங்கும் , சில விளங்காது ...என்றாலும் அது ஒரு கவிதை என்ற ரீதியில் அதற்கு வரைமுறைகள் வகுபடுவதில்லை...........எல்லையற்ற பரவலான மனம் போல கவிதைகளுக்கென குறிப்பிட்ட ரசனையை அல்லது உணர்வினைக் குறிப்பிடவோ இயலுவதில்லை.....

போட்டிக்கான கவிதைகள் தேர்வு செய்யும் பொழுதில் நிறைய நல்ல கவிதைகள் வாசிக்க முடிந்தது......அதில் தன்னுணர்வுகள் பல்வேறும் உணர முடிந்தது... வருத்தத்திற்குரிய தகவலெனில் சில நல்ல கவிதைகள் எழுத்துப்பிழைகளால் கூட நிராகரிப்பில் இருந்தது தான்.அது தட்டச்சுப் பிழையாகக் கூட இருக்கலாம்..படைத்தவர் போட்டியென வரும்போது யாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்..நாம் எவ்வளவோ தமிழைப் பற்றிக் பேசிக்கொண்டிருக்கின்றோம் , பெருமைப்படுகின்றோம்...அவ்வாறு இருக்கையில் எழுதி முடித்தபின் நாம் பிழைகள் செய்துள்ளோமா , ஏற்பட்டுள்ளதா என்று ஒரு முறையேனும் கவனிக்கப்பட வேண்டும்...சற்றே யோசித்துப் பாருங்கள் அது வருத்தத்திற்குரியது அல்லவா........சில கவிதைகள் வரி மீறல் இன்னும் சில பிறமொழிக்கலப்பாலும்(எழுத்தும்) தேர்வுகளுக்குல்லாகவில்லை.......உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தான் அது கவிதையாகின்றது ...சொல்லப்போனால் குறிப்பிட்ட ஒரு மனோநிலையில் (உ.ம். கோபம்) நாம் எழுதுகையில் சின்னதொரு இடையூறும் பெரிய பாதிப்பினை , அந்த கவிதையினை வேறு கோணத்தில் திருப்பிவிடுமென்பது இயல்பு....எனக்குத் தெரிந்து எழுதுவோர் நிச்சயம் இதை அறிவர்...

போட்டிக்கவிதைகளில் பல அவரவர் விருப்பு , வெறுப்புக்களைச் சார்ந்ததாகவே காண முடிந்தது.....மறுமலர்ச்சி மற்றும் மாற்றுச் சிந்தனைகள் பெரும்பாலும் பிரதிபலிக்கப்படவேயில்லை....போட்டி என்ற ரீதியிலும் ஒரு கவிதையானது உணர்ந்து செயல்படல் வேண்டும் எழுத்தில்......இங்ஙனம் கூற வேண்டிய மற்றுமொரு தகவலானது கவிதைகள் சில கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்குச் சற்று விதிவிலக்காகவே காணப்பட்டது.......எந்தவொரு கவிதையும் முழுமையாக உணரப்படுவது எப்போதெனில் அது சொல் , உணர்வு , பொருள் மூலம் கடத்தப்படும் அதே உணர்வினை உள்வாங்கக் கூடியதாக அமைதல் வேண்டுமாகின்றது.......கவிதையானது அகக் கண்ணாடியானதும் போல …...உள்ளது உள்ளவாறும் , தடுமாறுதலும் கூட அப்படியே உருப்பெறக்கூடியது......

கவிதைகள் என்பவை பரிசுகளுக்கு அப்பாற்பட்டவை எனினும் போட்டிகள் மூலமாகவே சீரிய சிந்தனைகள் இனங்காணப்படுகின்றது....இப்பணியினை வழங்கிய போட்டிக்குழுவிற்கு எனது நன்றிகளையும் , பரிசு பெறப்போகும் கவிதைகளுக்கு எனது இனிய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்...

-புலமி

எழுதியவர் : விழாக்குழு (26-Jan-15, 7:00 am)
பார்வை : 122

மேலே