காதல் காலங்கள்

தேனாய் இனிக்கும் என, தெரியாமல்...
தானாய் சிரித்த,
தருணங்கள் அது! விழித்திருந்து...
வீணாய் போன.
வருடங்கள் அவை!
வளைய,வளைய வந்து..
வழிய வழிய பேசி,
வசமாக்கி விட்டு...
விதியின் பெயர் சொல்லி
விழி நீர் சிந்தி....
வலியை மட்டும் தந்து விட்டு, வராமலே போய் விடும் மாயங்கள் அது, மறந்து சென்றாலும்..... மனதிற்குள் வலிக்கும், மரண காயங்கள் அது. மனதிற்குள் வைத்து.. மறக்கவும் முடியாமல். மறைக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல், உள்ளுக்குள் அழும்..
ஊமை காயங்கள். என்றும்..
மறையாத ரணங்கள்.

எழுதியவர் : மஹாமதி (26-Jan-15, 7:35 am)
Tanglish : kaadhal kaalangal
பார்வை : 151

மேலே