உனக்குக் கண்டிப்பா நரகம் தான்
அடியே மங்களம் நான் ஆண் கொசுவா பொறந்ததாலே நான் செத்ததுக்கு அப்பறம் சொர்க்கம் போறது நிச்சயம். நான் கொடுத்து வச்சவன்?
என்ன சொல்லறீங்க?
என்ன புரியாத மாதிரி பேசற. நாங்க ஆம்பளக் கொசுவா ரத்தவெறி கொண்டு அலையறோம். யாரு கெடச்சாக் கடிச்சு ரத்ததை உறிஞ்சாலாம்னு வெறியோட திரிறீங்க பொம்பளக் கொசுவெல்லாம். உன்ன நெனச்சாப் பரிதாபமா இருக்குதடி. எப்ப அடிபட்டு செத்து என்னத் தனிமரமா விட்டுட்டுப் போவயோ. மனுஷங்க உங்களுக்கெல்லாம் கொடுக்கற சாபம் வேற இருக்கு. அதனால உனக்கு நரகம் நிச்சயம். சாபம் ஒரு பக்கம் இருந்தாலும் அடிபட்டு சாகாம இன்னும் கொஞ்ச நாளைக்காவது எனக்குத் துணையா இருடிச் செல்லம்.