மனம் என்பது யாதெனில்
மனதென்ற ஒன்றை
யார்தான் படைத்தார்
அது செல்லும் பாதை
யார்தான் கொடுத்தார்
எனதென்று சொல்லி
எங்கெங்கோ செல்லுதே
அது இல்லையென்று சொல்லி
மீண்டும் வருவதேன்
மீண்டும் வந்தாலும்
மீண்டு வரமுடியாமல் தவிப்பதேன்
மனம் நம்பும் யாவும்
நம்பும் மனதை நம்புமா?
பிணமாகும் வரைக்கும்
இந்த மனம்தான் தூங்குமா?
யார் மனதும் முழுதாய்
எந்த மனதையும் அறியுமா?
மாற்றம் மட்டுமே மாறாதென்பதை
இந்த மனமும் அறியுமா?
இதுவும் கடந்து போகுமென்பதை
இந்த மனம்தான் ஏற்குமோ?
எது சொல்லி என்ன?
என்றும் நல்மனமே வாழுமே!