களவாடப்பட்ட கண்ணகிகள்-- அரவிந்த்
 
            	    
                வீதிக்கு ஒரு கற்சிலை வைத்து
வணங்கி நிற்பது வீண்தானோ..
சின்னஞ்சிறு பெண்களின் 
அலறல் ஒலி கேட்காமல் 
செவுடுகளாய் தெய்வங்கள்...
சூரனை கொன்றவன், 
அரக்க குலத்தை வென்றவன்,
இறைவன்,
என்றுரைத்தது எல்லாம்
பொய் தானோ...
பள்ளி செல்லும் மழலைகளை 
காகிதமாய் கசக்கி எறியும்
கயவர்களின் தலை எப்போது 
கொய்யப்படுமோ...
கல்லூரி செல்லும் பெண்களை 
காமப்பசிக்கு இரையாக்கும்
மனித மிருகங்களின் 
மரணம் எப்போது நிகழுமோ...
பெண்களின் தேகங்கள் பின்னால் 
வெறிபிடித்து அலையும் 
அரக்கர்கள் அழிக்கப்படுவது  
எப்போது...
தொடர்ந்து பல சம்பவம் 
வெளிச்சத்திற்கு வராமல் 
இன்னும் சில சம்பவம்.... 
முறுக்கிய மீசையை 
மழுக்கிடதோன்றுகிறது..
ஆண் என்று சொல்ல 
அசிங்கப்படுகிறேன் 
சில அரக்கர்களின் 
அகோர செயல்களால்..
ஈசனின் நெற்றிக்கண் இவர்களை 
பொசிக்கிடாதது ஏன் 
ஈசனின் கால்கள் ருத்ர தாண்டவம் 
ஆடிடாதது ஏன்.. 
சாதி மதம் பார்த்து 
அமைதியாக அமர்ந்து விட்டானோ 
இறைவன்... 
மாற வேண்டும் 
மாற்றம் வேண்டும் 
பெண் சமுகமே எழுந்திடு...
 
உன் கற்பை குறி வைத்து 
எச்சில் தெருநாய்கள் 
உன்னை துரத்தினால் 
அஞ்சி அஞ்சி ஓடிடாதே 
துணிந்து ஆயுதம் எடுத்திடு
 கொய்திடு தலைகளை..
சிவனுமில்லை 
எந்த மதத்திலும் 
இறைவன் என்று எவருமில்லை..
நீயே எமனாய் 
பறித்திடு 
அக்கயவர்களின் 
உயிரினை....!!!
	    
                
