காதலி

காதல்
ஒரு கிளி.
அன்பின் மொழி
இளமைக் கனி
இன்பம் தனி

காதல்
ஒரு வலி
ஆசை உளி
உறவின் வழி

காதல்
ஓர் இளமை
பருவ வளமை
வயதின் உடைமை

அன்றியும் காதலில்
சாதி அழி
சடங்கு இழி
சமயம் கிழி
கண்ணியம் திணி
கற்பு அணி
உடல் இச்சை பிணி

வாழ்வில் காதலி
காதலி காதலி
காதலிப்பதே அல்ல வாழ்வு ..!!
இது உணர்ந்தால் உண்டு உயர்வு...
உணரேல் உண்டாகும் தாழ்வு...!!!.

எழுதியவர் : அகன் (27-Jan-15, 10:31 pm)
Tanglish : kathali
பார்வை : 385

மேலே