வலியை தந்த நீ
ஏய் மனசே ....!!!
உனக்கு வேலையில்லையா ...?
எந்த நேரமும் என்னவனை ...
நினைத்து வலி தருகிறாயே ...?
மனசே ....
நினைத்து நினைத்து ...
வலியை தந்த நீ ...
ஒரு வேலை செய்வாயோ ....
வலியை தீர்க்கும்
மருந்தையும் தருவாயோ ...?
குறள் 1241
+
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 161
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
