====ஆணழகன் ======
தமிழினை உறிஞ்சி குடித்தவன்
தமிழ் சந்தம் பெற்ற பேரழகன்
அநியாயம் கண்டு துடிப்பவன்
அநீதியின் நரம்பை அறுப்பவன்
கலைமகள் நெஞ்சை தொட்டவன்
கரும்பாலையாய் என்னை பிழிந்தவன்
கற்சிலையும் கண்சிமிட்டும் -இவனை
கண்டதும் காதல் கொள்ளும் ,,,
ரம்பையும் ஊர்வசியும் அந்த
ரதிதேவியும் கண்டும் மயங்கும்
கட்டழகன் என்னவன் ஆணழகன் ...
இவனிதழ் தொட்ட மதுகரமோ
பூவித ழமர மறுத்திடுமே
தேன் சொட்டும் மகரந்தமோ
மடியேந்தி நிற்குமே இவனிடம்
காதல் பிச்சை கேட்குமே ...