உனை நினைத்தே நான் இறப்பேன்

என் அடிவயிற்றை
உன் இடையிடிக்க,

உன் தொடை,முதுகை
என் கைகள் தாங்க,

முத்தத்தால் நெற்றித்திலகமிட்டு,

கன்னத்தில் திஷ்டி முத்தமும் வைத்து,

சிறு குழந்தை போல நீயிம்,

உனை தூக்கிச் சுமக்கும் தாயாய் நானும்,

கவலைகளில்லா உலகத்தில்,
உனக்காக வாழ்ந்திடுவேன்.

ஈறுடலில் ஓருயிராய்,
உனைப்பொத்திப் பாதுகாப்பேன்.

உயிர்ப்போகும் நொடிகூட,
'உனை நினைத்தே நான் இறப்பேன்'.

எழுதியவர் : இன்பா (28-Jan-15, 11:20 pm)
பார்வை : 681

மேலே