காதல் கற்றால்

தூரத்து
விண்மீன் கூட்டம்
பூந்தோட்டமாகும்
உன் கண்களுக்கு....
மௌனத்தில்
உயிர் வலி
கற்பாய்....
தனிமையில்
நெரிசல்
கற்பாய்.....
செவிடன் நீ
ரகசியம்
கற்பாய்.....
ஊமை நீ
பாஷை
கற்பாய்....
குருடன் நீ
வர்ணம்
கற்பாய்....
சுவாசிக்காமல்
உயிர் வாழ்வாய்...
உயிர் வாழ்ந்தே
மரணம் கற்பாய்....