புதுமையான பரிசு

உன் பிறந்த நாள் பரிசாக எதை தருவதென யோசித்தேன்…
அய்யோ என்னும் முடிவு தெரியவில்லை...
யாரும் இதுவரை கொடுக்காத பொருளாக இருக்க வேண்டும் …
எதை தருவது உனக்கு …
கண்மூடி யோசித்தேன் …
விலை உயர்த்த பொருளை தரலாம் என்றால் லோ அது என்னால் முடியாது …
அப்படி அதை முயற்சி செய்து வாங்கி தந்தாலும் அது சீக்கிரம் அழிந்து விட கூடியது…
என் அன்பே.. அழிவில்லா பொருளாக எதை தருவேன் உனக்கு..
என்னை ஏற்கனவே தந்து விட்டேன் ஆனால் நானும் அழிய கூடியவன் தானே…
சரி வேறு எதை தருவது…?
இப்படி யோசித்தே இரவு 11 ஆஹிவிட்டது..
ஆஹா கிடைத்து விட்டது..இரவு… ஆம் இரவு…
என் இரவுகலை உனக்கு பரிசாக தந்தால்…! ?

அழிவில்லாதது..நிலையானது
ஆம்ம் பெண்ணே என் இரவுகலை உனக்கு தருகிறேன் என் அன்பின் அடயாள பரிசாக…
சிரிக்கிறாயா..என்ன எது புதுமையான பரிசு என்று…
நன்றாக கேளடி
என் காலை ,மதியம்,மாலை..என எல்லாம் பலரும் எடுத்து கொள்கின்றனர்…
ஆனால் என் இரவு அப்படி எல்லா என்னக்கு மட்டும் சொந்தம்..
என் உரிமை இல்லாமல் யாரும் அதை எடுத்து கொள்ள முடியாது..
அது தனி உலகம்..அதில் மட்டுமே நான் நானாக இருக்கிறேன் … எனக்காக வாழ்கிறேன் .
எந்த இரவு உலகத்தில் எனது கனவுகளுக்கு மட்டுமே அனுமதி …
இரவு அழகான உலகம்,அமைதியான உலகம்..இதில் மட்டும் தான் நாம் நாமாக இருக்கின்றேம்
நமது மனசாட்சி எழுந்து துள்ளி குதித்து விளையாடுகிறது…

அடுத்த நாளின் தொடக்கததிற்கு இரவுதான் ஒளி காட்டுகிறது…
இப்படி பட்ட இரவு வை தருகிறேன்…
எடுத்து கொள் அன்பே என் இரவுகளைஉனது பிறந்த நாள் பரிசாக…

எழுதியவர் : ஜெய்நாதன் சூ ரா (29-Jan-15, 1:04 pm)
பார்வை : 76

மேலே