உலக அதிசயம் இல்லை

நீ இருக்கும் உயரம்
எகிப்திய பிரமிடாக இருந்தாலென்ன..
உனக்கும் எனக்கும் இடையிலே
சீனப் பெரும் சுவர் இருந்தால்தான் என்ன..
உன்னை அடையும் முயற்சிகள்
பைசா கோபுரமாய் சாய்ந்தால் என்ன..
பாபிலோனின் தொங்கு தோட்டங்களாய்
ஆசைகள் நமக்குள் இருக்கும் நிலையிலும்
ரோமாபுரி கொலாசியமாய் உன் இதயம்
விளையாட்டரங்கமாய் இருக்கையிலே..
என் அழகிய தாஜ் மஹாலே
எப்படியும் சொந்தமாக்கிடுவேன் உன்னை!
இது ஒன்றும் உலக மகா அதிசயம்
இல்லையென்று கொள்வாய் கண்ணே!