சலிப்பு

அசைந்து ..
அசைந்து..
நடந்து போகிறது..
யானை..
தன் விதியை நொந்தபடி..!
புத்துணர்ச்சி முகாமுக்கு
போய் வந்த பிறகு!
ம்ம்.. இன்னும் ஓராண்டு ஆகுமே..
அது வரை..
புத்துணர்வோடு
நாலு காசு பார்த்து தர வேண்டுமே..
பாகனுக்கு!
சலிக்கிறதப்பா.. இந்த வாழ்க்கை!
நடக்கிறதப்பா ..உன் வாழ்க்கை!

எழுதியவர் : கருணா (29-Jan-15, 5:03 pm)
பார்வை : 372

மேலே