ஊமை உள்ளம்...

புண்ணானது
மூங்கில்
புல்லாங்குழல் ஆனது
இசை சொல்ல...

புண்ணானது
பாறை
சிற்பம் ஆனது
கதை சொல்ல...

புண்ணானது
மனம்
ஊமை ஆனது உள்ளம்...

ஏனோ
வார்த்தை பேச
வழியில்லாமல்...



எழுதியவர் : Ivan (18-Apr-11, 10:03 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
Tanglish : uumai ullam
பார்வை : 494

மேலே