நிலையான உண்மை
அணுவை பிளக்க இயலாது என்றான் நம்பினோம்
இன்று பிளந்து விட்டேன் என்கிறான் நம்பிவிட்டோம்
ஒளியைவிட விரைவானது ஏதுமில்லை என்றான் நம்பினோம்
ஒளியை விட இது வேகம் என்கிறான் நம்பிவிட்டோம்
உலகம் உருண்டை என்றான்
நம்பினோம்
உலகம் தட்டை என்கிறான்
நம்பிவிட்டோம்
நிறைக்கும் ஆற்றலுக்கும்
சம்மந்தமில்லை என்றான் நம்பினோம் அதுவே
சம்மந்தபடுத்தி சொன்னான் நம்பிவிட்டோம்
அன்று இல்லை என்றான்
இன்று உண்டு என்பான்
நிரந்திரமாய் ஓர் உண்மை
நிலைகொண்டது கிடையாது
மாறும் என்பது மட்டும்
மாறுவது கிடையாது
அறிவாலே அறிவதெல்லாம்
ஒருநாளில் வீழ்ந்துவிடும்
உணர்வாலே அடைவதுவே
சரியாது நின்றுவிடும்
அறிவியல நம்பி நம்பி
அறிவிழந்த தம்பி தம்பி
அறவியலை அறிவதிலும்
தப்பில்ல தம்பி தம்பி