மாறாதவை

தடுமாற்றமே வழக்கமாக
மேகங்கள் நிலைத்து ஓரிடத்தில்
நிற்காமல் நகர்ந்தாலும்
அவை மேகங்கள்..என்பதால்
கவலை யாருக்கும் இல்லை!

ஒருதலைக் காதலாக
அலைகள் கரையை தொட்டு ..
தோல்வியோடு திரும்பினாலும்
அவை அலைகள்..என்பதால்
வருத்தம் யாருக்கும் இல்லை!

மேகத்தை நிற்கச் செய்தேன்..
அலையை நிற்கச் செய்தேன்....
அழகாகப் புகைப்படத்தில் ..!
என்றாலும் தொடர்ந்து நிற்கவில்லை
அவை..!
அவை..அலைகள் ..மேகங்கள்..
அப்படித்தான் இருக்கும்
என்பதால் நானும்
கவலைப் படவில்லை!

எழுதியவர் : கருணா (30-Jan-15, 12:36 pm)
பார்வை : 85

மேலே