செருக்கு அழிந்தது காதலின் முனால்

கல்வியில் சிறத்ந்து விளங்கினேன் ....
கணினியின் புது முகங்களுக்கு என்னை நண்பன் ஆக்கி கொண்டு இருந்தேன் ..
கலி யுகத்தின் யுத்திகளில் கைதேரிந்து இருந்தேன் ...
மனிதர்களின் உண்மை முகங்களை காணும் சக்தி பெற்றும் இருந்தேன் ...
எனக்கும் ஞான செருக்கு எட்டிபர்த்தது ....
அதன் பிம்பம் வெளியிலும் எட்டி பார்த்தது ...
அதிலும் அளவிலா போதை இருக்கத்தான் செய்தது ...
பலர் என்முன் தலை குனிய கண்டேன் ..அடடா என்ன ஒரு சுகம் அதிலே ...
எனது இந்த புதிய நிலை ..காதலியின் பலநாள் கண்காணிப்பு முடிவுபெற்று ..
ஒருநாள் அரேந்கேற்றம் நடந்து பல சூடான விவாதங்களுக்கு பின் அவளின் ஒரு கேள்வியில் முடிந்தது
சொல்லும் அறிவாலியே "காதல்" என்றால் என்ன யாரும் சொல்லாத புதிய பதில் வேண்டும் என்றாள்...
என் தலை குனிந்தது ...செருக்கு அழிந்தது காதலின் முனால்...
என் கண்ணீர் துளியில் செருக்கு அழிந்து ..காதல் இன்னும் ஒரு அடி வளர்ந்தது ..
இறுதியில் அவள் கை என்னை அணைத்தது...
காதல் ஞானம் பிறந்தது...

எழுதியவர் : ஜெய்நாதன் சூ ரா (30-Jan-15, 2:24 pm)
பார்வை : 158

மேலே