+++மன்னருக்கும் சறுக்கல் உண்டு+++
மந்திரியாரே! நேற்று நான் முக நூலில் பதிவேற்றிய புரஃபைல் பிக்சருக்கு இதுவரை 10 லைக்கூட வரவில்லையே..!! ஏன்?
மன்னா! மக்கள் செயற்கையாக போஸ் கொடுத்து போடும் படங்களுக்கு இப்பொழுதெல்லாம் லைக் போடுவதில்லை..
ஓ.. அப்படியா? பிறகு என்ன செய்யலாம்?
நீங்கள் போருக்கு சென்ற பின்பு புறமுதுகிட்டு ஓடி வருவீர்களே.. அதனை ஒரு செல்பி எடுத்து முக நூலில் போட்டுப்பாருங்கள்.. ஒரு நிமிடத்தில் ஆயிரம் லைக் குவியும்.. ஏன் முக நூல் நிறுவனர் மார்க் ஸூபர்பெர்க் கூட லைக் போடுவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..
அது எப்படி?
ஏனென்றால் அப்பொழுது எடுக்கப்படும் உங்களது போட்டோ அவ்வளவு இயற்கையாக இருக்கும்....
?!??!??!