கானலாய் போன கனவும் உயிரும் - உதயா

இலட்சம் கனவுகளில்
சிறகுகள் முளைத்த
பாவையவள் அவளை
அன்பிலும் பண்பிலும்
பாராட்டி சீராட்டி வளர்த்தனர்
பெற்றவர்கள்

கல்வியை பள்ளியில்
பயனுற முடித்துவிட்டு
அறிவினை பெருக்க
அறிவியல் பயில
கல்லூரிச் சென்றால்

கனவினில் தோன்றிய
நினைவுகல்யெல்லாம்
நிஜமாகிப் போன
காலங்களில்
கனவினைச் சிதைத்தான்
பாவியொருவன்

தன்னையறியாமலே
மனம் கொல்லைபோனாதான்
காதல்
தான்மட்டும் மனதில்
நினைத்துக்கொண்டு
அவளை வற்புறுத்தினால்
அது காதலாகாது

அவளுக்கு
கடைமைகள் ஆயிரமென
ஆயிரமுறை உரைத்தும்
அந்த மூடன்
உணரவில்லை

அவள்
உணர்வினை அறியாலாமலே
தன் உணர்வு பெரிதென
நினைத்து கோபத்தின்
எல்லைக்கே சென்றுவிட்டான்
அந்த முட்டாள்

தனக்கு கிடைக்காத
அந்த பூ யாருக்கும்
கிடைக்கா கூடாதென
மனமெண்ணி
தென்றலும் கொஞ்சநினைக்கும்
அவள் பூவான முகத்தில்
அமிலத்தை வீசி
பூவினை கருக
செய்துவிட்டான்

அவள் கண்ட
கனவுகள் அனைத்தும்
கானலானது
அவள் உயிரோ
காற்றானது

அவளப் போன்ற
ஆயிரம் பூக்கள்
திங்கள் தோறும்
கருகிப் போகிறது
காரணம் காதல்
ஒரு தலைக் காதல்

பூக்களை
இரசிக்க உரிமையுண்டு
அதன் விருப்பத்தோடு
பறிக்க உரிமையுண்டு
ஆனால் அதனை
அழிக்க எவருக்கும்
உரிமையில்லை .........

எழுதியவர் : udayakumar (3-Feb-15, 5:24 pm)
பார்வை : 59

மேலே