ஆதலினால் காதல் செய்வோம் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
பச்சிலை ஓர்நாள் சருகாவதுபோல
பச்சைமரங்கள் நம்பயன்படு பொருளானதே...!!!
புல்தின்னும் பசுக்களுக்கு நாம்கண்ட
காகிதம் நல்லுணவாகிப் போனதே...!!!
தெளிநீராய் ஓடிய காவிரிஇன்று
கருநீராய் எங்கும்தேங்கி நிற்கிறதே...!!!
நிலமுழுது பொன்னெடுத்து வாழ்ந்த நாம்
நிலத்தையே பங்கிட்டு விற்கிறோமே...!!!
ஆறிலா ஊருக்கு அழகுபாழ்
என்பதுபோய் ஆறுகளனைத்தும் பாழானதே...!!!
நிலம்நீர் காற்று வானமென
ஒன்றையும் விட்டுவிடா நம் மனிதவாழ்வு...!!!
மற்றவர்களுக்குத் தானேஎன்று பாழாக்கியநாம்
தாயையும் அவளன்பையும் விட்டுவிட்டோமே..!!!
அதிலும் சுயநலமே...!!!!
நம்தாய் என்பதால் இணைந்து வாழ்கிறோம் - அதுவும்
மனைவி வரும்வரை..!!!
நமக்கென்று இருந்தது விடுத்து
நாளை பயன்பெறும் மற்றவர்களுக்காக
தாயையும் அவளன்பையும் அதோடு
இயற்கையையும் காதல் செய்வோம்...!!!!