அவள் செய்த மாற்றங்கள் - உதயா

அவள்
என்னுள் செய்த
சில மாற்றங்கள்

என்னையறியாமலே
அவள் இதயத்தை
என்னுள் திணித்துவிட்டு
என் இதயத்தை
பறித்துக்கொண்டாள்

ஏனோ
பறித்த இதயத்தை
எரித்துவிட்டு
திணித்த இதயத்தை
கிழித்துவிட்டாள்

காரணமறியத் துடித்த
என் விழிகளையும்
புதைத்துவிட்டால்

காரணம் தேடியே
அலைகிறேன்
என்னும் அவள் செய்த
மாற்றங்களில்

காரணம் என்னவாக
இருக்குமோ ?

எழுதியவர் : udayakumar (3-Feb-15, 6:13 pm)
பார்வை : 86

மேலே