தாயாக நான்

எனக்குள் புது உயிராக
வந்தாய் நீ -குழந்தையாக

என்னையே புது உயிராகவும்
மாற்றினாய் நீ - தாயாக!

மீண்டும் மழலையாகிறேன்
உன் மடியினில்

மீண்டும் குழந்தையாகிறேன்
உன்னோடு விளையாடுகையில்

மீண்டும் பள்ளி
பருவத்துக்கு சென்ற
உணர்வு எனக்க்குள்
துரு துரு வென்று ஓடும்
உன்னை துரத்துகையில்

என் நாட்கள் எல்லாம்
முன்பை விட
அழகாய் இப்பொழுது!

உன் குறும்புகள் எல்லாம்
முன்பை விட
அதிகமாய் இப்பொழுது

சரியான தொல்லை
அதிக சேட்டை என
வாய் சொன்னாலும்

உன் ஒவ்வொரு
அசைவுகளையும்
அணு அணுவாய் ரசிக்கிறது
என் விழிகள்

எழுதியவர் : யாழினி வ (4-Feb-15, 3:10 am)
பார்வை : 118

மேலே