தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும்

தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும்..
...................................................................................

ஒரு செல்வந்தர் தன்னுடைய பால்கியகால நண்பனை பார்க்க சென்றார்.

அந்த நண்பன் ஒரு விவசாயி.

செல்வந்த பணக்கார நண்பனைப் பார்த்த அந்த விவசாயி நண்பன் இவரைப் பார்த்து, " நீ எப்படி இருக்கின்றாய்..? என்று கேட்டான்.

அதற்கு அந்த செல்வந்த நண்பன்,நான் நன்றாக இருக்கிறேன்.,

" நீ எப்படி இருக்கின்றாய்? " என்று பதிலுக்கு கேட்டார்.

அதற்கு அவன் " பரவாயில்லை ஆனால் வாழ்க்கையில் ஒன்றை மட்டும் புரிந்துக்கொண்டேன்.நாம் கடினமாக உழைத்தால்தான் ஒன்றை அடையமுடியும் அப்படி அது கிடைக்கவில்லை என்றால் நாம் சரியாக உழைக்கவில்லை என்றுதான் பொருள்" என்று சொன்னான்.

அந்த விவசாயி நண்பன் தன் செல்வந்த நண்பனிடம் சொன்னதுதான் நாம் நமக்காக சொல்ல வேண்டியது.நாம் ஒன்றை அடைய வேண்டும் என்றால் நியாயமான வழியில் கடுமையாக உழைக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நம்மோடு சேர்ந்து நம் குடும்பமும் அழியும் என்பதுதான் உண்மையான நிலை..

ஆம்.,நண்பர்களே.,

* வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையாயினும் அதற்கு வளைந்து கொடுங்கள்; முறிந்து விடாதீர்கள்.உங்களின் திறமைகளைக் கட்டியெழுப்பி அவற்றை மேற்கொண்டு வரப்பாருங்கள். அயர்ந்து விடாதீர்கள்.

* உங்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய குறிக்கோளை ஏற்படுத்தி அதற்கேற்ப துடுப்பினை சலிக்காது இயக்கி வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கோடு கப்பலை பெரும் புயலின் வழியே நகர்த்துங்கள்.

* குறிக்கோளினை அடையும் போது தோல்விகள் குறுக்கிட்டால், நீங்கள் அவமானப்பட்டுவிட்டதாக எண்ணாதீர்கள்.உங்களிடம் முயன்று பார்க்கும் துணிவு துளிர் விட்டிருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* உங்களின் கடந்தகால அனுபவங்கள்தான் உங்கள் வழிகாட்டிகள், அவற்றைப் பின்பற்றி புத்திசாலித்தனமாக, விவேகமாக முன்னேறுங்கள்.வாழ்க்கை உங்கள் நண்பன். வரலாறு உங்கள் வழிகாட்டி.

*நீங்கள் கடுமையாக முயற்சி செய்தும், உங்களுக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால்,அது உங்களுக்கு தேவை இல்லாமல் கூட இருக்கலாம்.

* நீங்கள் வெற்றிபெற வேண்டுமாயின் தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் கைவிடாதீர்கள்.

நம்பிக்கையும், முயற்சியும் தான் வெற்றிக் கிரீடத்தின் ஒளிமிகு இரு வைரங்கள்..

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (4-Feb-15, 12:09 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 1096

மேலே