ஒரு துளி மழையால்
ஒரு துளி மழையால்
உடல் முழுவதும் நனைகிறேன் !
ஒரு கடல் நீர் இருந்தும்
ஒற்றைத் துளியாக காண்கிறேன் !
எதிர்பாராத போது எதிரே வந்தாய்
ஏனடி என் மனதை கொய்துச் சென்றாய் !
நீ எங்கே என்று மீண்டும் மீண்டும்
தேடச் செய்தாய் !
நீ எங்கே என்று மீண்டும் மீண்டும்
தேடச் செய்தாய் !
அஜந்தா ஓவியம் போலே அழகாய்
நீ அசைந்து சென்றாய்
என் மனதையும் அசைத்து சென்றாய் !
எல்லோரா சிற்பம் போலே
எல்லோர் மனதையும் இழுத்து சென்றாய்!
என் மனதை மட்டும் ஏனோ வைத்துக் கொண்டாய் !
ஒய்யாரமாய் நீ வந்து சென்றது
ஓயாமல் என் நினைவில் நீந்துது !
யார் நீ என்று
யாரிடம் கேட்பது ! - சொன்னால்
என் காதலுக்கு யாரை
தூது அனுப்புவது ?
பெண்மை, மெண்மை, அழகு, ஆற்றல்
நான்கும் நீ கொண்ட நான்மறை வேதமோ ?
நான் தேடும் ஓர் வேதம் பெண்ணே
அது நீ என்றால் மிகையாகுமோ ?
கருமை கொண்டு பூசிய
இரு விழிகள் - அதை
வறுமை கொண்டு தேடுதே
என் விழிகள் !
சற்று சாயம் பூசிய இரு இதைழ்கள் – அதை
ஏக்கம் கொண்டு தேடுதே என் இதைழ்கள் !
எட்டு முழ சேலை ஒன்று
மேனியெங்கும் சுற்றியபோதும்
அங்கே எட்டிப் பார்க்கும்" இடை" அழகு
பெண்ணே உன்னை மறக்க
என் மனம் -என்னிடம் இல்லை !
என் மனதை நீ பறித்து சென்றாய்
என்பது பொய்யும் இல்லை !
இனியும் மறைந்திருந்து செய்யாதே சூழ்ச்சி !
என் எதிரே வந்து தருவாயோ உன் நிலைக் காட்சி !