நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் போட்டிக் கவிதை

தொலைந்து போன முகத்தைத்
தேடித் திரியும் உலகம்...
நிஜ முகத்தை மறைக்கும்
நிழல் முகத்திற்கேக் காலம்...
அன்பு ,காதல் பொய்யான வேளையில்
வாழ்வின் அர்த்தம் புரியா மனம்...
சாதி மத பேதங்கொண்டு தேசத்தை
மயானமாக்கும் தீவிரவாதம்...
கையிலுள்ள காசுக்கே மதிப்பளிக்கும்
கையாலாகாதக் கூட்டம்
உழைப்பிலே உண்மையிலே நம்பிக்கையின்றி
ஊரை மாய்க்கும் சுயநலம்...
உயிர்மண்ணையே நஞ்சாக்கும்
மண் புரட்டும் புழுவாய் நெகிழி...
தன் சவத்திற்கு தானே குழிதோண்டும்
மரந்தின்னிக் கழுகாய் மனிதம்...
வாழ்வின் உயர்பொருள் அறியாக்
கூட்டத்தின் இலக்கறியா ஓட்டம் ...
பொறுக்காத நெஞ்சினிலும் மண் பயனுற
தூரத்து விடிவிளக்காய் நம்பிக்கை...!


அபர்ணாசெங்கு

எழுதியவர் : அபர்ணாசெங்கு (4-Feb-15, 2:44 pm)
சேர்த்தது : அபர்ணா
பார்வை : 79

மேலே