தூங்காமல் தூங்கி ஹைக்கூ

*
கிரிவலப் பாதை நெடுக
பக்தர்கள் பேச்சின் இரைச்சல்
அச்சத்தில் பறவைகள்.
*
கருந் திராட்சைப் பழம்
ருசித்துச் சாப்பிடும் தருணம்
பால் குடித்த நினைவு.
*
செடி மறைவில் ஒய்வாய்
தூங்காமல் தூங்கி அழகாய்
விழித்திருக்கிறது முயல்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Feb-15, 4:05 pm)
பார்வை : 134

மேலே