நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் மண் பயனுற வேண்டும் 2015-ரகு
அரிதாரக் கனவென்றே விளங்கும் -பாரதம்
ஆசியக் கண்டங்களில் முழங்கும்
அரிதான சாதனைகள் நிகழ்த்தி -இந்த
அகிலத்தில் தனித்துவமாய் சிறக்கும்!
விண்ணோடு விஞ்ஞான மேவும் -உலகம்
வியந்திடவே வல்லரசா யாகும்
மண்ணோடு மகத்துவங்கள் சேர -மா
மனிதர்களை தன்னகத்தேப் பெறும்
இந்தியராய்ப் பேருவகை கொண்டு -நாட்டின்
இடர்களைய ஏற்றிடுவோம் சபதம்
அந்திபகல் அயரா துழைப்போம் -உயர்
அறிவியலை மேன்மையுறக் கற்போம்!
பொருளாதார உயர்வு நிலையொன்றே -நம்
புகழ்பாடும் எட்டுத்திக்கும் நாளை
வறுமைக்கோட்டிற் கீழென்ற நிலை -இனி
வருங்காலங் காணாது செய்வோம்
செம்மையுற வேளாணில் சிறப்போம் -நாடு
செழுமையுற தொழிற்புரட்சி புரிவோம்
வண்மைக்குப் பஞ்சமிலா நாடென்று -கால
வரலாற்றில் பதிவிடவே முனைவோம் !
---------------------------------------------
இக்கவிதை என்னால் எழுதப்பட்டது என
உறுதியளிக்கிறேன்
விலாசம்:அ.ரகு சுஜய் டிஜிட்டல்ஸ்
374,அவினாசி ரோடு பெரியார்காலனி
திருப்பூர் தமிழ்நாடு இந்தியா
அலைபேசி: 91 83447-34304