முன்னேற வழி

முயற்சி செய்
உன் முன் நிற்கும்
தடைகளை களைந்திட
அதுவே முன்னேற்றத்தின்
முதல் படி
ஒரு புத்தகத்தில் மூவாயிரம்
பக்கங்கள் படிப்பது
எப்படி என்று மலைக்காதே
முயற்சி செய்
பக்கங்கள் கூட உன்
பக்கம் வந்து விடும்
இவ்வுலகில் ஒவ்வொரு
உயரினமும் ஏதோ
ஒன்றிற்கு முயற்சிகிறது
மனிதனே நீயும்
முயற்சி செய்
முன்னேற வழி பிறக்கும் ...

எழுதியவர் : கவிஆறுமுகம் (4-Feb-15, 11:35 am)
Tanglish : munnera vazhi
பார்வை : 319

மேலே