காதல் இனிது
இதுவரை அறியவில்லை
போடா என்பதில்
இத்தனை மென்மையை
உந்தன்
ஏற்ற இறக்கங்கள்
ஏற்றிக்கொல்கிறது
உந்தன் சல்லடைக் கண்கள்
வடிகட்டி முடிக்கையில்
மீதமிருந்தவன் நானா.....?
எச்சில் பழங்களை கூட
உண்ணாதவன் நான்
இன்றோ உணவாக
உந்தன் மலரிதழ்கள் கேட்கிறேன்
விடியலை பார்க்கிறேன்
முதல் முறை
உறக்க நேரங்கள்
காலவரையற்று வேலைநிறுத்தம்
செய்வதில்
குளிக்க ஆயிரம் முறை
யோசித்து கிடப்பேன்
இன்றோ வெளியே வாடா என
திட்டும் வரை மயங்கி
கிடக்கிறேன் அந்த குளியலறை
ஷவரில்
அந்த ரோஜா இதுவரை
தென்பட்டதில்லை
இன்று என் தங்கை சுற்றிபோடுகிறாள் அதற்கு எந்தன்
கண்பட்டுவிட்டதென
ம்ம்ம்
மாயங்கள் செய்துவிட்டாய்
நான் சமையல் குறிப்பெடுக்க
துவங்கிவிட்டேனடி
இதை காரணம்காட்டி மறுத்துவிடாதே திருமணத்தை
எனக்கும் தெரியும் இனி
அடுப்படி ஆண்களுக்கென
ஆனாலும் இந்த காதல்
இனிதுதான்