ஆதலினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

தோற்றமாம் மானுடத்தின்
துலங்கிய மெல்லுணர்வு.
வேற்றுமை விதிகள் சாரா
வியத்தகு நல்லியல்பு.

கூற்றுவன் கைகள் தீண்டா
குறைவுறு முறைகள் வேண்டா
காற்றினில் கலந்து நிற்கும்
களங்கமில் மூலக்கூறு.

ஒருவனுக்கொருத்தி என்ற
உண்மைசார் பண்பு காத்து
வருவன எதிர்த்து நின்று
வாழ்ந்திடும் உரிமைப் பேறு.

செம்புலப் பெயல் நீர் போல
சேர்ந்துடும் அன்பு நெஞ்சம்
பின் புலம் பார்ப்பதில்லை
பிரிவதை நினைப்பதில்லை!

காதல் ஓர் வாழ்வின் அங்கம்
கண்ணியம் காத்திடில் இல்லைப் பங்கம்.
ஆதலால் காதல் செய்வீர்
அவனியில் இன்பம் துய்ப்பீர்!

எழுதியவர் : சிவநாதன் (8-Feb-15, 2:37 am)
பார்வை : 69

மேலே