முரண் துளிகள் -- ஒன்று
பூரண மதுவிலக்கு அவசியமென்று
பேரணியில் பேசிவிட்டு சென்றவன்
வரிசையில் நின்றான் மதுக்கடையில் ...
------
பகுத்தறிவு மேடையில் முழுங்குபவன்
தொகுத்து வழங்கினான் ஒரு நிகழ்ச்சியை
ஆன்மீக மாநாட்டில் காவிஉடையுடன் ...
-------
காதலர்தின எதிர்ப்பு மாநாட்டில்
காதலையே வெறுத்துப் பேசிட்டு
விரைந்தான் காதலியை காண ....
-------
அரசியலை அறவே வெறுப்பவன்
அனல்பறக்க பேசினான் கட்சிமேடையில்
ஆம்பூர் பிரியாணிக்கும் ஒரு பாட்டிலுக்கும் ...
------
மழைக்கும் பள்ளியில் ஒதுங்காதவனை
மாலையிட்டு வரவேற்றனர் கல்லூரியில்
பட்டமளிப்பு விழாவிற்கு தலைமையேற்க ...
------
தொடரும் ......
பழனி குமார்