மனமில்லா மனிதா மனதை மதிக்கணும் புனிதா
உனகென்று நீதி சொல்வேன் ஓ நந்தலாலா
மனகணக்கொன்று போட்டு வாழ்ந்தால் நன்று தோழா !
பணமொன்றும் காவலில்லை வாழ்க்கைக்கு
மனமில்லா மனிதரிடம் சேரும் பொருளதுவாகும்
உணர்வற்ற பணத்திற்கு காவலாய் நீயும் ஆனால்
மனமென்றும் அமைதியில்லை அறிந்துகொள் தோழா!
சுகம் சோகம் எங்குமுண்டு! மனம்தானே தீர்வை சொல்லும்!
மாற்றுகருத்து சொல்வதற்கு வேறேதுமுண்டா ?
வாழ்க்கையின் தேவையாய் பணமிருக்கும் வரை
மனிதத்தின் சிக்கலென்றும் வருவதுண்டோ !
பணம்மட்டும் போதுமென்ற மனமாறும் போது
உனக்கு நீ போட்ட சுருக்கு முடிச்சாய் ஆகும் பாரு!
யாருக்கு என்னவென்று முன்சொல்ல முடியாது!
நிலைமாறும் வாழ்க்கையில் நிலைத்திட வழிதேடு !
ஒருகோடி இருந்தாலும் உனக்குள்ளே நிம்மதி கிடையாது!
தெருக்கோடி வாழும் மனிதனில் மனசாந்தி கொண்டவருண்டு!
சிறப்பான மனமிருந்தால் கசப்பான அனுபவமென்பதே வாராது !
பொறுப்பான மனிதன் நினைத்தால் இல்லத்தில் மகிழ்ச்சி வாழும் பாரு !
நிறைவான மனமிருந்தால் நிம்மதி தானாக வந்துவிடும்
குறைசொல்லி பழகியவர்க்கு மன நிறைவென்பதே பெருங்குறையாகும்
இருப்பதை கொண்டு வாழ்ந்தால் அதுதானே பேரின்பமாகும்
சிறப்புடன் நீயும் வாழ சிரித்து பிறரை சிரிக்கவைத்து வாழ்ந்திடு !