வாழ்வின் சில நிமிடங்கள்

முன்னுரை:- இந்த கதையில்பெயர்களை பயன்படுத்தாமலும், முடிந்தவரை தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தியும் எழுதியுள்ளேன். யாவும் கற்பனையே.
--------------------------------------------------

வாழ்வின் சில நிமிடங்கள்

அப்பா இப்ப எனக்கு கல்யாணம் தேவையா?
டேய் கல்யாணம் பண்ணிக்கடா. ஆனா, உங்கம்மாகூட உன்னோட மனைவி ஒன்னா சேராம பார்த்துக்க. அதோட கொஞ்சமா செலவு பன்ற பொண்ணா பாரு.
அப்பா இன்னிக்கு பாக்கப்போற பொண்ணு எப்படி?
எனக்கென்ன தெரியும்? தரகர் சொன்னதுதான், நீயே பொண்ணுக்கிட்ட பேசித்தெரிஞ்சுக்க. உங்கக்கா, உங்கம்மா என் பணத்தையெல்லாம் வாரியெரச்சாங்க, அதுமாதிரி பொண்ண பாத்துராத. சரி, உன் அம்மா கிளம்பிட்டாளானு பாரு.

எல்லோரும் பெண் பார்த்துவிட்டு மீண்டும் வீடுவந்து சேர்ந்தனா்.

என்னடா? பொண்ணு புடிச்சிருக்குனு சொல்லிட்டு வந்துட்ட. உன் அக்காவும் மாப்பிள்ளையும் இன்னும் பாக்கல. பொண்ணு எப்படி? என்ன உன்ன புடிச்சிருக்கா?

அப்பா, அக்காவும் மாமாவும் உனக்கு புடிச்சா சரின்னு சொல்லிட்டாங்க. பொண்ணுக்கும் என்னை புடிச்சிருக்காம், செலவுபத்தி கேட்டிங்கல்ல கூட்டம்னாளே பயமாம், கடைவீதிக்கெல்லாம் அவங்க அம்மா அப்பாதான் போவாங்கலாம், கல்யாணம்கூட சாதரணமாக வைச்சுகலாமேனு கேட்டா, நானும் சரின்னுட்டேன்.

என்னடா சொல்ற? உங்கம்மாவும் அக்காவும் உன் கல்யாணத்தை ஆடம்பரமா நடத்தனும்னு சொல்றாங்க, நீ இப்படி சொல்ற.

எப்படியாவது நீங்களே சமாளிங்கப்பா.

தொலைபேசியில், என்னம்மா தம்பி கோயில்ல சாதாரணமா கல்யாணம் வைக்கனும்ன்னு சொல்றானாம்ல, எங்க வீட்டுக்கார்ட்ட சொல்லிருக்கான். ஆமான்டி, உங்கப்பாவும் அவனும் சேந்து ஆடுராங்க. அவன கூப்புடு நான் கேக்குறேன், என்ன காரணம்னு? டேய் இந்தா பேசு, உங்கக்கா. தொலைபேசி கை மாறியது, என்னக்கா? ம் னொன்னக்கா, எங்க வீட்டுகார்ட்ட என்னடா சொன்ன? அக்கா, அப்பா சொன்னத சொன்னேன், அவ்வளவுதான். கூப்புட்றா அவர. அப்பா, அக்கா. ஏன்டா என்ன கோத்தூா்ற? பேசுங்கப்பா. என்னம்மா நல்லாயிருக்கியா? ம் எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்னு சொல்றான், அவன் சொன்னத கேட்டுட்டுதான இருந்தீங்க. ஆமம்மா, நான்தான் சொன்னேன். ஏம்ப்பா, ஒரே பையன வைச்சுகிட்டு அப்படி சொன்னிங்க, பணப்பிரச்சணைகூட இல்லையேப்பா. எல்லாம் என் வாய்க்கொழுப்பு, பொண்ணு பாக்கப்போனப்ப பொண்ணோட அப்பாக்கிட்ட என்னோட பொண்ணு, தம்பிக்கும் தம்பிக்கட்டப்போற பொண்ணுக்கும் கல்யாணத்தன்னிக்கு ஆளுக்கு இருவத்தஞ்சு பவுனு போட்றதா சொன்னேன். எதுக்குப்பா அப்படி சொன்னிங்க? அவங்க பெருமையை அடிச்சுவிட்டாங்க, நானும் மனசுதாங்காம சொல்லிட்டேன். கோயில்ல சீக்கிரமே வைச்சா, அவசரத்துல போட முடியலனு சொல்லலாம். இப்ப என்னம்மா நீ போடறேன்னு சொன்னா, ஆடம்பரமா கல்யாணம் வைச்சுக்கலாம், நீ என்னம்மா சொல்ற. நான் அவர கேட்டுட்டு சொல்றேன்பா, தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

என்னடா இப்டி பண்ணிட்ட? அதான் சமாளிச்சுட்டிங்களேப்பா. அம்மா உள்ள இருக்கா கேட்றப்போவுது. ஆமப்பா, இதோட இந்தப் பேச்ச நிறுத்திக்களாம்.

மேற்கொண்டு இந்தப்பேச்சை யாருமே ஆரம்பிக்கவில்லை.
சிலதினங்களில் திருமணமும் கோயிலிலேயே நடந்து முடிந்தது.

கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் ஆகுது, எங்கயாவது வெளிய போயிட்டு வரலாம்லனு அத்தை சொல்றாங்க. நீ என்ன சொல்ற. எனக்கு ஒன்னுமில்லங்க. ஆனா, அத்தை சொல்றத எப்படி மறுத்து பேசறதுங்க. என்னம்மா பன்றது, என்னோட வேலைதான் ஒனக்கே தெரியுமில்ல, காலைல 9 மணிக்குப்போனா ராத்திரி 8 மணி ஆகுது வீட்டுக்கு வர, நீ வேணும்னா அம்மாகூட போயிட்டு வா. சரிங்க.

என்ன ரொம்ப சந்தோசமா இருக்க இல்லங்க இன்னிக்கு அத்தைகூட கோயிலுக்கு போயிட்டு அப்படியே கடைவீதி போனோம் முதல்ல பயமா இருந்துச்சு அப்பறம் எனக்கே புடிச்சுப்போச்சு, அங்குள்ள புது மனிதர்கள் புதுப்புது பொருட்கள் இதையா இந்தனைநாள் இழந்துட்டோம்னு நினைக்கறேன். சரி சரி எங்கம்மாகூட போனா இப்டிதான். ஆனா, நீ தேவையானத மட்டும் வாங்கு, அநாவசியமா செலவு பன்னாத சரிங்க.

என்னடா நேத்து ரெண்டு மகாராணியும் கோயிலுக்கு போயிருப்பாங்கபோல.
ஆமாப்பா.
நேத்து செலவு எவ்வளவு தெரியுமா 5000 ரூபாய்.
விடுங்கப்பா நான் 1,50,000 ரூபாய் சம்பாதிக்கிறேன், ஏதோ ஒருதடவை செலவு பன்னிட்டு போறாங்க.
அதுக்கில்லடா கோயிலுக்கு போறப்பவே இப்படினா எதாவது வாங்கனும்னு போறப்ப எவ்வளவு செலவு ஆகும். அட வுடுங்கப்பா பாத்துக்கலாம். நீ பாக்கத்தான போற உங்கம்மா வேலையை.

ஆறு மாதங்களுக்கு பிறகு

ஏய் இங்க வா. ஏன்டா இவ்வளவு கோபமா உன் மனைவிய கூப்பிடற? அப்பா, அவ இன்னிக்கு என்ன செஞ்சா தெரியுமா? நம்ம துணியெடுக்குற கடைக்குப்போய் ரூ48,000 மதிப்புள மூனு சேலை வாங்கிருக்கிறா! அதுவும் கடன் கணக்குள.
என்னங்க கூப்பிட்டிங்களா?
இன்னிக்கு எதுக்கு அவ்வளவு விலைக்கு சேலை எடுத்தே? எவ்வளவு விலைனு என்கிட்ட கடைகாரர் சொல்லலைங்க, அத்தைதான் உன் வீட்டுகாரன் கொடுத்துக்குவான்னு சொன்னாங்க. அதான் எனக்கும், உங்கக்காவுக்கும், அத்தைக்கும் மூணு புடவை எடுத்தேன்.

அம்மா இங்க வாங்க. எல்லாம் உங்க வேலைதானா?
ஆமான்டா. இப்ப அதுக்கு என்ன?
இப்படியே நீங்க ரெண்டுபேரும் செலவு பண்ணுனா நான் பிச்சைதான் எடுக்கனும்.
அதனால இனிமே நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து வெளியே எங்கயும் போகவேணாம். எவனெவன் வீட்லயோ மாமியார் மருமக சண்டை வருது என் வீட்ல வரக்கூடாதா?
என்னங்க அத்தை கோவமா போறாங்க. போகட்டும் விடு.
அத்தே நில்லுங்க. என் மேல கோபமா?
நீ என்ட்ட இனிமே பேச வேணாம்.
என்னத்தே சொல்றிங்க.
அதான் பேசவேணாம்னு சொல்றேன்ல.

என்னங்க அத்தை என்ட்ட பேசமாட்டேங்கறாங்க.
சரி விடு ரொம்ப நல்லாதாப்போச்சு, நீ ஏன் அழற. என்னங்க நான் கொஞ்சநாள் எங்கம்மா வீட்டுக்கு போயிட்டு வரட்டா.
அதான் நல்லது, போய்ட்டு வா.

ஒரு வாரத்திற்குப் பிறகு.....

அப்பாஆ... இங்க வாங்க அம்மாவையும் கூப்பிடுங்க
இதோ வந்துடாடா என்ன சொல்லு?
நேத்து என்னோட பள்ளிக்கூட நண்பன பார்த்தேன். அவன் ஒரே புலம்பல், அவனோட அம்மாவுக்கும், அவனோட மனைவிக்கும் ஒத்துவரலயாம், அவுங்க அம்மா இவள விட்டுட்டு இன்னொரு திருமணம் பண்ணச்சொல்றாங்க, அவனோட மனைவி தனிக்குடித்தனம் போகனும்னு சொல்றாங்கனு பேசிட்டே இருந்தவன் திடீர்னு நெஞ்சு வலிக்குதுனான் உடனே மருத்துவமணைக்கு கூட்டிப்போனேன் அங்கே மருத்துவர் பரிசோதனை பன்னிட்டு ஒன்னுமில்ல. ஆனாலும் மனநல மருத்துவர்கிட்ட போய் பார்க்கசொன்னார். நானும் அவர்கிட்ட அவன கூட்டிட்டு போனேன் அவர் அவனோட பிரச்சனை பத்தி முழுசா கேட்டுட்டு அவங்க அம்மாவையும் மனைவியையும் கூட்டிட்டு வரச்சொன்னார். நான் உடனே அவர கேட்டேன் அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது அப்பறம் எப்படி நெஞ்சு வலி வந்தது, நெஞ்சுவலிக்கும் மனநிலைக்கும் என்ன சம்மந்தம்?
மருத்துவர் சொன்னார், நம்மளோட செயல்பாடுகள் இயக்கசக்தி மற்றும் இயங்கு சக்தியால நடக்குது. இயக்க சக்திங்கறது மனசு, இயங்கு சக்திங்கறது உடல், அந்த உடலை இயக்கும் மனமானது பலவிதமான குழப்பங்களாலும் வேதனையாலும் பாதிப்படைவதால் உடல்நிலை பாதிப்படைகிறது. ஆரம்பநிலை பாதிப்பை மருத்துவ பரிசோதனையில் சரிவர கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நாளடைவில் அந்த பாதிப்பின் மிகுதியால் உடலின் எல்லா உறுப்புகளும் பாதிப்படைந்து அது வாழ்வின் எல்லைக்கே கொண்டுவந்து விடுகிறது. அப்பா, என்ன கதையா சொல்றேன்? தூக்கம் வர்றமாதிரி முழிக்கிறிங்க. சரி அத விடுங்க, அம்மாகிட்ட ஒன்னு சொல்லனும், அம்மா இங்க பாருங்க இந்த வேகமான உலகத்துல பணம்கறது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். ஆனா பணம் மட்டுமே வாழ்க்கையில்ல. நமக்கு பணம் எல்லா நேரமுமே கிடைச்சுறாது. அது கிடைக்கிறப்ப சேமிச்சு வைச்சுக்கனும். நம்மளோட அவசியத்துக்கும் அதே சமயம் வருமானத்துக்குள்ள கொஞ்சமாவது சேமிச்சுட்டு செலவு பண்ணுனா பின்னாடி அதிகபட்ச செலவான மருத்துவம், சொந்தவீடு, குழந்தைகளோட படிப்பு இதுக்கெல்லாம் யார்ட்டயும் கையேந்தி நிக்கவேண்டிய அவசியமில்ல பாருங்க. யாரோட வேலையும் எப்ப வேணும்னாலும் போகலாம். இப்பல்லாம் அரசாங்க வேலை கிடைக்கிறவுங்களுக்குக்கூட ஓய்வூதியம் கிடையாது, இதுக்குமேல எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.
அம்மா அப்பறம் இன்னொன்னு சொல்லனும், பாவம்மா அவ, தினமும் தொலைபேசில உங்க புராணம்தான், அத்தை என்ட பேசமாட்டாங்களானு அழுவுறா. ஆனா ஒன்னுமா மாமியார் அதிகமா பேசுராங்கனு அம்மாவீடு போன மறுமகள்தான் நிறையபேர். மாமியார் பேசமாட்டிங்கறாங்கனு அம்மா வீடு போனவ இவளாத்தான் இருக்கும்.
டேய் ஏன்டா அழற.
இல்லப்பா எனக்கு பயமா இருக்கு. என் நண்பனோட வீட்ல மாதிரி நம்ம வீட்லயும் ஆயிடுமோனு. இவுங்க இப்படியே பேசம இருந்தா அதான்ப்பா நடக்கும்.

சில நிமிடங்களுக்கு பிறகு தொலைபேசியில்

நான் அத்தை பேசுறேன்மா.
சொல்லுங்கத்தே.
என்னம்மா அம்மா வீட்லயே இருந்துட்ட, எப்ப வர்ற.
நீங்கதான் பேசமாட்டிங்கிறீங்க.
சரி வாம்மா பேசிக்கலாம்.
இன்னைக்கே வர்றேன் அத்தே.

அத்தே....
வாம்மா இப்பதான் வர்றியா?
என்ன மன்னிச்சிடுமா நான்தான் உன் கணவன்ட்ட தேவையில்லாம திட்டு வாங்க வைச்சுட்டேன்.
அட அதவுடுங்கத்தே, அவர் திட்டுரதுகெல்லாம் யாரு கவலைபடுறா. நீங்க பேசலனுதான் கவலை.
நீதான்டி என் செல்ல மருமகள்
அதுமட்டுமல்ல இனிமே நாம தேவைக்கு அதிகமா செலவு பண்ணாம சேமிக்கக்கனும்.
அத்தே இன்னும் அவர் திட்டுனத மறக்கலயா?
இல்லம்மா வாழ்க்கையில இன்னும் நெறைய கத்துக்க வேண்டியதிருக்கு.
என்புள்ள மேல எனக்கென்ன கோவம்? அவன் எனக்கு புள்ளயா பொறக்க நான்தான் குடுத்துவைச்சுருக்கனும்.
அத்தே உங்களுக்கு என்ன ஆச்சு?
சரி மருமகளே தெளிவா சொல்றேன் கேளு.
சொல்லுங்க மாமியாரே!
அங்க என்ன சத்தம்?
நீ எப்ப வந்த?என்று கேட்டுக்கொண்டே வந்தனர் அப்பாவும் மகனும்
அத்தே இவுங்க யாரு
தெரியலியேம்மா பக்கத்து வீட்டுக்காரங்களா இருக்கும்
அப்பா நம்மள தெரியலியாம்
வுட்றா வுட்றா வெளிய போங்கனு சொல்லாம விட்டாங்களே அதுவே போதும்.

சுபம்

இதுவரை என்னுடைய கற்பனையோடு பயணித்தவர்களுக்கு நன்றி.

எழுதியவர் : வாகை வென்றான் (9-Feb-15, 12:45 am)
பார்வை : 302

மேலே