முரண் துளிகள் -- இரண்டு

பெண்ணுரிமை மாநாட்டிற்கு தலைமை
மகளிர் சுதந்திரப் பேரணிக்கு முன்னிலை
மருமகளை வதைப்பதோ வீட்டினில் ...
-------
தமிழர்கள் நிலைபற்றி ஊடகத்தில் உருக்கம்
தமிழ்மொழியின் சிறப்புப்பற்றி மேடை முழக்கம்
கொஞ்சுவதோ ஆங்கிலத்தில் பேரனிடம் ...
-------
தமிழ்வழிக் கல்வியே தேவையென வாதம்
தமிழையே சுவாசியுங்கள் என்று போதனை
தம்மகளை சேர்ப்பதோ கான்வென்ட் பள்ளியில் ...
-------
நம் நாடு நம் மண் நம் மொழி என்கிறார்
தீராத ஆசையாம் அமெரிக்க குடிமகனாக
முரணுள்ள மனதின் உச்சக்கட்டமோ ...
--------
இனப்பற்று மொழிவெறி கொள்கை எனதென
இடிமுழக்கம் வீதியில் கொடியுடனே நாளும்
இலக்காம் அந்நிய நாட்டில் குடியேருவதோ ...
--------
முரண்பட பேசுவதோ முற்றிலும் தவறாம்
முரண்படும் மனங்கள் மடிவதே மேலாம்
மூன்றாம் முறையாய் கட்சி மாறுகிறார் ....
தொடரும் ...
பழனி குமார்