மண் பயனுற வேண்டும் கவிதைப்போட்டி - நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம்
சக்கரம் கொண்டு சுழல்கிறதெம்பூமி அதில் வக்கரம் கொண்டவருக்கென
உக்கிரமாய் சுற்றுதொரு சக்கரம் என் தேசியக் கொடியின்மேலே.,
அதை பத்திரமாய் காத்திடுவோம் அத்தாய்க்கு புத்திரனாய் வாழ்ந்திடுவோம்
முக்கியமாய் சொல்லிட ஓர் சத்திய கதையுண்டு
இது சிலரின் கதையில்லை சிலந்தியின் கதையென்பேன் சிறுத்தையின் கதையென்பேன்.,
இங்கே சிலந்தியுமுண்டு சிறுத்தையுமுண்டு கான்போம்
சிலந்தி வலையில் சிறுத்தைகள் வீழ்வதுமில்லை.,
சிறுத்தை குகையில்
சிலந்திகள்
வாழ்வதுமில்லை.,
சிறுத்தைகளால் சிலந்தி வலை பிண்ணலாகாது.,
சிலந்திகளால் சிறுத்தையை கொலை செய்யலாகாது.,
இப்பூவுலகிலே,
சிறுத்தைப்போன்ற மனிதருமுண்டு,
சிலந்திப்போன்ற மனிதருமுண்டு.,
அதில் உயர்ந்தவருமில்லை தாழ்ந்தவருமில்லை
ஒவ்வொருவறும் சமமென்போம் ஒவ்வொரு நொடியும் சுகமென்போம்
தேசம் போற்றுவோம் நேசம் வளர்ப்போம் தாய் மண்ணை பச்சிலம் குழந்தைகளாய் கொஞ்சி.,