துரோகம் கவிஞர் இரா இரவி

துரோகம் ! கவிஞர் இரா .இரவி !

இழைத்தவனை
மன்னிக்கும் உள்ளம் பெறுக
மண்ணில் நிம்மதி நிலவும் !

பழிக்குப் பழி வாங்குவது
விலங்குகள் குணம்
மன்னிப்பது மனித குணம் !

அன்றே மறந்திடுக
அன்றே உரைத்தார் திருவள்ளுவர்
மறதியும் நன்மை பயக்கும் !

மனதில் காயம் இருக்கலாம்
மறதி மருந்தாகும்
நினைவு ரணமாக்கும் !

தீங்கு செய்தவனை
மன்னித்துப் பாருங்கள்
மனம் திருந்துவான் !

காரணி தன்னலம்
காரணம் இயந்திரமயம்
கொல்கின்றனர் மனசாட்சி !



.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Feb-15, 8:29 pm)
பார்வை : 208

மேலே