எழுத்து தளம் தரும் இனிய சொந்தங்கள் - வெண்பா

ஆர்வத்தி னால்படித்தும் ஆர்வத்தி னால்ரசித்தும்
ஆர்வத்தி னாலெழுது கின்றோம்நாம் - ஆர்வம்
பொருந்தும்பல் உள்ளங்கள் புத்துறவாய்த் தேடித்
தருதே எழுத்துத் தளம்.

[இருவிகற்ப நேரிசை வெண்பா]

பொருள் எளிதில் விளங்க சீர் பிரித்து:

ஆர்வத்தினால் படித்தும், ஆர்வத்தினால் ரசித்தும்
ஆர்வத்தினால் எழுதுகின்றோம் நாம் - ஆர்வம்
பொருந்தும் பல் உள்ளங்கள் புது உறவாய்த் தேடித்
தருதே எழுத்துத் தளம்.

**************************************************************************

நண்பர் சந்தோஷ் அவர்கள் இத்தளத்தோடு தனதுறவைச் சொன்ன பதிவிற்குப் பின்னூட்டமாய் இட்ட பாடல்...

எழுதியவர் : விஜயநரசிம்மன் (10-Feb-15, 11:14 am)
பார்வை : 69

மேலே