விபச்சாரம்
மற்றவரை புறம் பேசிடவே
நாவு விபச்சாரம் செய்ததுவே!
மற்றவர் பேச்சினை மறைந்து கேட்டிடவே
செவி விபச்சாரம் செய்ததுவே!
கையூட்டால் ஏழையை வாட்டிடவே
கரங்கள் விபச்சாரம் செய்ததுவே!
காம எண்ணத்தில் பார்த்திடவே
விழிகள் விபச்சாரம் செய்ததுவே!
மதுபோதை வாங்க சென்றிடவே
கால்கள் விபச்சாரம் செய்ததுவே!
ஊழலில் ஊன் வளர்த்திடவே
உப்பிய வயிறு விபச்சாரம் செய்ததுவே!
கையெழுத்துக்கு காசு வாங்கிடவே
விரல்கள் விபச்சாரம் செய்ததுவே!
அப்பாவிதனை துடிக்க வைத்திடவே
இதயம் விபச்சாரம் செய்ததுவே!
மனதில் கேடு நினைத்திடவே
மூளை விபச்சாரம் செய்ததுவே!
பாசத்தால் பிறரை கவிழ்த்திடவே
சுவாசம் விபச்சாரம் செய்ததுவே!
வரம்பை மீறி நடந்திடவே
நரம்பு விபச்சாரம் செய்ததுவே!