-- அன்னையும் அப்பனும் அணைந்த விளக்கு ஆதலால் அனுப்பு முதியோர் இல்லத்திற்கு --

ஆத்திசூடி - இன்றைய நிலையில்

-- -- அன்னையும் அப்பனும் அணைந்த விளக்கு
ஆதலால் அனுப்பு முதியோர் இல்லத்திற்கு -- --

-- -- இல்லற ஒழுக்கம் இழுக்கு எமக்கு
ஈவதற்கு மனதில் ஈரமா இருக்கு -- --

-- -- உடைத்து எறியவே உறவுகள் எமக்கு
ஊரைப் பற்றிய உறுத்தல்கள் எதற்கு -- --

-- -- எண்ணம் எல்லாம் கள்ளம் நமக்கு
ஏழைக்கு பசித்தால் ஏளனம் எமக்கு -- --

-- -- ஐம்புலன்களில் ஐந்து அடங்காமல் இருக்கு -- --

-- -- ஒழுக்கம் தவறுதல் இயல்பே நமக்கு
ஓரினச்சேர்கை தவறு இல்லை எமக்கு -- --

-- -- ஒளவியம் கொள்ளல் அழகே நமக்கு
எஃகு எடுத்தாலும் பயமில்லை எமக்கு -- --

-- நீளும் ..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

++ கற்குவேல் .பா ++

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (10-Feb-15, 8:35 pm)
பார்வை : 130

மேலே