அலங்காரம்

அலங்காரம்....!

ஞாயிறு -
மறைவதற்குள்...
நன்னீராடி -
நறும்புகை யூட்டி...

திங்கள் -
தேய்வதற்குள்....
திலகம் இட்டு -
முடிதிடுவாள்.....

செவ்வாய் -
செத்துவிடும்....
செவ்விதழை -
சீரமைத்து.....

புதனும் -
பலியாகும்....
புருவத்தே -
மையேறும்.....

வியாழன் -
விடைகேட்க...
வேழநிற -
குழல் கூடும்....

வெள்ளியும் -
வீழுந்துவிடும்....
வெண்முல்லை
அதில்வாழ.....

சனியும் -
சாய்ந்துதிரும்...
சதுராடி -
முகம்பார்த்து.....

பின்னே.....

செவியில் -
நகை பூட்டச்...
செப்புசிலை -
நாள்கேட்கும்...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (11-Feb-15, 11:43 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 70

மேலே