காதலியும் கைபேசியும்
அடிக்கடி உன் தவறிய அழைப்புகள்
அப்போதெல்லாம் உன் காதலையெண்ணி
அநேகமாக தவறாமல் பேசினேன் உன்னிடம்
அப்படிதான் ஒருமுறை உன்னோடு செல்கையில்
அடிபட்டு விழுந்துவிட்டேன் என்ன செய்ய
அவசர ஊர்திக்கும் தவறிய அழைப்பை
அழுதுகொண்டு தருகிறாயே என்ன செய்வேன்