பசி

கதவைத் திறந்தேன்..
புறா ஒன்றும்
அணில் ஒன்றும்
இறைந்து கிடந்த
அரிசித் துளிகளை
கொறித்துக் கொண்டிருக்க..
ஓசைப்படாமல் திரும்பி
உள்ளே வந்தேன்..
எனக்குப் பசிக்கவில்லை!
என்னிடம் உணவும் இல்லை!
எனக்கென்று நானும் இல்லை!

எழுதியவர் : கருணா (12-Feb-15, 11:09 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : pasi
பார்வை : 79

மேலே