ஆசிரியர்
அன்று..........
கற்றுக் கொடுத்தவரே ஆசிரியர்
இன்று ........
கற்றுக் கொள்கிறார் ஆசிரியர்!
அடித்தாவது பாருங்கள்
என் பிள்ளை படிக்கனும்
அன்றைய பெற்றோர் சொன்னது!
அடித்துப் பார் .....!
நான் யாரென்று தெரியும்
இன்றைய பெற்றோர் மிரட்டுவது!
அடி வாங்கியதால் நான்
அதியுயரத்தில் வாழ்கிறேன்
அடியாத உன் பிள்ளை
இரும்பு கம்பிக்குப் பின்னே!!!
இளைய பெற்றோரே
ஒரு சொல் கேளுங்கள்
பாசம் என்பது வாழ வைக்க
வகை செய்தல் வேண்டும் !
அன்பு என்ற திரைமூடி
உமது விரலால் உமது
கண்ணைக் குருடாக்கலாமோ?
அடிபட்ட கல் தானே
அழகிய சிலையென
அகிலத்தில் காட்சி தரும் !
ஆசிரியரை வதைக்காதீர்
ஆசிரியரை மிதிக்காதீர்!!!!
உமது எதிர் காலத்தில்
அவர்களுக்கும் பங்குண்டு!!!!!