மழையின் கோபத் தீ ----உதயா-------

தன் வாழ் நாளையே
உமக்காக அற்பனித்தான்
உன் நண்பன்
மண்புழு

நீ
வாழ்வில் முன்னேற
வளமாக வாழ
வயிறார உணவருந்த
ஓடி ஓடி உழைத்தானே

அவன் செய்த
பாவம் தான் என்ன ?
உன்னுடன் நட்பூண்டதா ?
இல்லை
எதிர்பார்ப்புயின்றி
தன்னலமின்றி
உமக்காக உழைத்ததா ?

உடன் உழைத்த
உன் நண்பனுக்கே
இரசாயன உரத்தினை
உணவாக விஷமிட்டுக்
கொன்றாயே.........

ஒன்றா ...............?
இரண்டா ...........?
எத்துணைக் கோடி
மண்புழுவை
கதற கதற
கருவழித்துக்
கொன்றாய் ...

நீ
செய்த பாவங்களின்
பலனை இப்பிறவியிலே
அனுபவியடா
மானித அற்பனே .....

உனக்காகவா ...
நான் மனமிறங்க வேண்டும்
இல்லை இல்லை
இனி நான் உனக்காக
வரப்போவதே இல்லை
நீ செய்த பாவத்தினை
நினைத்து நினைத்தே
அழிந்து போடா அரக்கனே .....

எழுதியவர் : udayakumar (12-Feb-15, 7:20 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 190

சிறந்த கவிதைகள்

மேலே